மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!
மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 8 பேர் பலியானதாக, அம்மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரி வைபவ் திவாரி தெரிவித்துள்ளார்.
இதில், பங்குராவின் ஒண்டா பகுதியில் 4 பேரும், கோடுல்புர், ஜாய்பூர், பட்ராசயேர் மற்றும் இண்டாஸ் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மின்னல் பாய்ந்து பலியாகியது தெரிய வந்துள்ளது.
இதேபோல், புர்பா பர்தாமன் மாவட்டத்தில் 5 பேர் மின்னல் பாய்ந்து பலியானதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பேரிடர் மேலணமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அம்மாவட்டத்தின், மாதாப்திஹி பகுதியில் 2 பேரும், அவூஸ்கிராம், மங்கல்கோட் மற்றும் ரெய்னா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மோசமான வானிலையின்போது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்