Punjab வெள்ளம்: மாணவர்களுக்கு 'முதுகால்' பாலம் அமைத்த இளைஞர்கள் - கவனம் ஈர்க்கும் வீடியோ!
பஞ்சாப் மாநிலம் முழுவதும் பருவ மழையால் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர், குர்தாஸ்பூர், மற்றும் தர்ன் தரன் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன.
இதற்கிடையில் மோகா மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
அங்குள்ள மல்லேயானா என்ற கிராமத்தில் ஒரு நாடகத்தனமான காட்சி அரங்கேறி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
கிராமத்தின் முக்கிய அணுகல் சாலை சேதமடைந்ததால் சாலைக்கு குறுக்கே வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.
சாலை பிளவைக் கடக்க அச்சப்பட்டு சிறுவர் சிறுமியர் நிற்கும்போது, சில கிராமத்தினர் துணிச்சலுடன் பள்ளத்தில் இறங்கி குனிந்து நின்று மாணவ மாணவியர் முதுகில் ஏறிச் செல்ல வழி செய்தனர்.
Glimpse Of Viksit Bharat
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) July 24, 2025
Moga, Punjab
A road in Moga was washed away. Children going to school got stuck.
People made a bridge with their backs to help 30 children cross.#ModiInUK#Punjab#AkhileshYadmullapic.twitter.com/4d0h9phKIL
"மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் எங்களை இணைக்கும் ஒரே சாலை இதுதான். இது இடிந்து விழுந்தால், நாங்கள் முற்றிலும் துண்டிக்கப்படுவோம்," என ஒரு கிராமவாசி ட்ரிப்யூன் செய்தித்தளத்தில் கூறியுள்ளார்.
நிலைமை இன்னும் மோசமடைவதற்குள் அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மோகா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஹிம்மத்புரா என்ற கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினரின் மாருதி கார், சாலை சேதமடைந்ததால் ரயில்வே கீழ்பாலத்தில் சிக்கியது. வெள்ள நீர் அதிகரித்த சூழலில் குடும்பத்தினர் காரின் மேற்பரப்புக்கு ஏறியுள்ளனர்.
பின்னர், உள்ளூர் மக்கள், மேயர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
Moga, Punjab: A car was swept away after a bridge got submerged due to heavy flooding. Mayor Baljeet Singh bravely dived into the water to rescue the trapped family.#Moga#PunjabFloods#RescueOperation#MayorBaljeetSingh#FloodAlertpic.twitter.com/LqfuY7f81B
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) July 22, 2025