``வீட்டில் உணவு சமைக்க தினமும் 1,150 ரூபாய்'' கணவரிடம் வசூலிக்கும் மனைவி - கூறும் காரணம் என்ன?
இரண்டு குழந்தைகளின் தாயான ரே என்பவர் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவுக்காக தினமும் £ 10 (1,150 ரூபாய்) வசூலிப்பதாக டிக் டாக்கில் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கும் ஊதியம் தேவை என்று அவர் கூறியிருக்கிறார்.
திருமணமான தம்பதிகள் பொதுவாக ஒருவருக்கொருவர் உணவு தயாரித்து கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் வீடுகளில் மனைவிகள் காலை, மதியம், இரவு உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள்.
அதற்காக இல்லத்தரசிகள் கட்டணம் வசூலிப்பார்களா என்று கேட்டால் இல்லை, ஆனால் இங்கு ஒரு பெண் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவிற்கு தினமும் கட்டணம் வசூலித்து வருகிறார்.

ரே என்ற அந்தப் பெண் இது குறித்து தனது டிக் டாக் பகிர்ந்துள்ளார்.
தனது கணவர் மெக்டொனால்ட்ஸ் அல்லது க்ரெக்ஸ் போன்ற உணவகங்களில் உணவுக்காக பணம் செலவு செய்ய முடியும் என்றால் வீட்டில் நேரமும், முயற்சியும் செலவு செய்து உணவு தயாரிக்கும் தனக்கும் அதே தொகை செலுத்தலாம் தானே? என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார்.
ரே தனது கணவருக்கு தயாரிக்கும் சாலட் வீடியோவை டிக் டாக் பகிர்ந்த இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.