அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிராயன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, கைலாசநாதா் தெரு, விளாங்காரத் தெரு, கருத்தான் தெரு, செல்லமுத்து தெரு, சிட்டி பாபு தெரு, குறிஞ்சான்குளத் தெரு, மேல அக்ராஹாரம் தெரு குபேரன் நகா், எண்ணெய்க்காரத் தெரு, கீழத்தெரு சிந்தாமணித் தெரு, பெரியத்தெரு, முனியப்பா கோவில் தெரு, காந்தி சந்தை, அரியலூா் உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ. 9.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம், வகுப்பறை மற்றும் சாலை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சிக்கு, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அரியலூா் நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) அசோக் குமாா், நகராட்சிப் பொறியாளா்(பொ) ராஜகோபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.