ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,100 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!
பங்குச் சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,451.87 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 247.16 புள்ளிகள் உயர்ந்து 82,428.22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 67.85 புள்ளிகள் உயர்ந்து 25,128.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் 2.89 சதவீதம் உயர்ந்து சென்செக்ஸ் லாபத்தில் முன்னிலையில் உள்ளது. மேலும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (1.66%), பஜாஜ் ஃபைனான்ஸ் (1.18%) மற்றும் எடர்னல் (0.98%) லாபத்தில் உள்ளன.
டைட்டன், பெல், மாருதி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபம் ஈட்டின.
என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் வங்கி, டாடா மோட்டார்ஸ், எல்டி, ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன.