டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!
மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.
வரி குறித்த காலக்கெடு நெருங்கி வருவதால், இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அனைவரும் காத்திருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பலவீனமான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த மட்டங்களில் ஆதரவு நீடித்த நிலையில், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் உள்நாட்டு பங்குகளில் எதிர்மறையான போக்குகள் ஆகியவற்றால் அதன் ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.22 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.41 ஐ தொட்ட நிலையில், முடிவில் 5 காசுகள் குறைந்து ரூ.86.36-ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.31 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!