செய்திகள் :

விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!

post image

விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இதன் விற்பனை நாளை (ஜூலை 23) முதல் இந்திய சந்தைகளில் தொடங்கவுள்ளது.

சிறந்த போட்டோகிராபி, பேட்டரி திறன், திரையின் தரம் ஆகியவற்றிற்காக இந்த ஸ்மார்போன் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதிக பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. இதன் எடை 186 கிராம்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விவோ நிறுவனம், எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கான விற்பனை நாளை முதல் அனைத்து விவோ கிளைகளிலும், இணைய விற்பனை தளங்களிலும் தொடங்கவுள்ளது.

விவோ எக்ஸ் 200 எஃப்இ சிறப்பம்சங்கள்

  • விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் உடையது.

  • 6.31 அங்குல அமோலிட் திரை கொண்டது. 2640×1216 பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. திரை அதிக பிரகாசமாக இருக்கும் வகையில்5000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 12GB+256GB மற்றும் 16GB+512GB என இரு வேரியன்ட் நினைவகத்துடன் வருகின்றன.

  • பின்புறம் 50MP கேமராவுடன் IMX921 சோனி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஜூம் வசதிக்காக 50MP கேமராவுடன் IMX882 சோனி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க செல்ஃபிக்கும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், புகைப்படம் மற்றும் விடியோக்களுக்கு சிறந்தது.

  • 6000mAh பேட்டரி திறனுடன் 90W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

  • மழைநீர் மற்றும் தூசு புகாத்தன்மையுடன் IP68 மற்றும் IP69 திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

Vivo X200 FE Will Go On Sale In India Starting July 23: But Should You Buy

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.பிஎ... மேலும் பார்க்க

சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

புதுதில்லி: சோலார் தகடுகளை தயாரிப்பாளர் மற்றும் இ.பி.சி. சேவை வழங்குநருமான சோலெக்ஸ் எனர்ஜி ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் வருவாய் 84 சதவிகிதம் அதிகரித்து ரூ.260 கோடியாக உள்ளதாக தெரிவித்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!

மும்பை: இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337.83 புள்ளிகள் உயர்ந்து 82,538.17 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல வேகம் இழந்தது, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் சரிந்து 82,186.81 ஆகவும் 5... மேலும் பார்க்க

லாபக் கணக்கில் ரிலையன்ஸ் பவர்! அனில் அம்பானியின் ஏறுமுகத்துக்கு என்ன காரணம்?

கடன், நஷ்டம் போன்ற செய்திகளால் மட்டும் பிரபலமடைந்து வந்த தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது, தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இ... மேலும் பார்க்க

ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல் மீ நிறுவனம் புதிதாக இரு மத்திய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிமுகமாகிறது. சீனாவை தலைமைய... மேலும் பார்க்க