மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா
பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்
ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது தெரிய வந்துள்ளது.
பிகாரில் வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதில், பிகாரில் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 18 லட்சம் வாக்காளர்கள் ஏரற்கெனவே காலமாகிவிட்டதும் தெரிய வந்துள்ளது.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,89,69,844 ஆக இருக்கும் நிலையில், 97.30 சதவீதம் பேர் அதாவது 76,834,228 வாக்காளர்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் உரிமை புதுப்பித்துக் கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.