செய்திகள் :

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

post image

நமது நிருபர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

சேலம் தொகுதி திமுக உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், "இத்திட்டத்திற்கு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியும், 2025-26 -இல் ரூ.86,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட அளவில் வேலைவாய்ப்புக்கான தேவையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்படும்போது நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதி கோரப்படுகிறது.

எனவே மன்ரேகா திட்டத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளார்.

நிலுவைத் தொகை: தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், "2024-2025 நிதியாண்டிற்கான மன்ரேகா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ரூ.4,034 கோடி நிலுவைத் தொகையை அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்பது உண்மையா?' என்று கேட்டிருந்தார்.

இதற்கு மக்களவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஊதியப் பொறுப்பு ரூ.2884.16 கோடி 2025, ஏப்ரலில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

31.03.2025 நிலவரப்படி பொருள் கூறுகளுக்கான மொத்த நிலுவையில் உள்ள பொறுப்பான ரூ.858.66 கோடிக்கு எதிராக, நிலுவையில் உள்ள பொறுப்பில் 50 சதவீதம் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க

மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறார். பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களால் யாரு... மேலும் பார்க்க

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க