60 வயதில் ஓய்வா? உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?
வாழ்க்கையில் இரு வேறான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.
வாழ்நாள் முழுக்க வேலை செய்துகொண்டே இருப்பவர் ஒரு ரகம்.
தான் வேலைக்கு செல்லாமல், தன் பணத்தை வேலை செய்ய வைப்பவர் மற்றொரு ரகம்.
இதில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?
நம்மில் நிறைய பேர் 50 வயதுக்கு மேல்தான் ரிட்டைர்மென்ட் பற்றியே நினைத்துப் பார்க்கிறோம். கண்டிப்பாக ஒருநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று அதனைத் தள்ளிப்போடுவதே நம் வழக்கம். நீங்களும் அப்படித்தானா? கொஞ்சம் நில்லுங்கள். அந்த ஒருநாள் இன்றுதான். இந்த முடிவை இப்போதே எடுத்தால் 60 வயதுக்கு முன்னதாகவே உங்களால் ரிட்டையர் ஆக முடியும் (உங்களின் வயது 30-40 எனும் பட்சத்தில்...)

உங்களுக்கு ஒரு டெஸ்ட்!
இன்று உங்களின் மாத தேவை என்ன என்பதைக் கணக்கிடுங்கள். உதாரணமாக வீட்டு வாடகை, மளிகை, பெட்ரோல் போன்ற அத்தியாவசிய செலவுகள் என்ன என்று பாருங்கள். உங்களின் 60-வது வயதில் உங்களுக்கு மாதம் எவ்வளவு தேவை என்று தெரிந்துகொள்ள ஆசையா? இந்தக் கணக்கைப் போட்டுப் பாருங்கள்
FV = PV × (1 + r/100)^n
FV - Future Value, எதிர்கால செலவு
PV - Present Value, தற்போதைய செலவு
r - விலைவாசி உயர்வின் விகிதம்
n - உங்கள் வயதை 60-ல் கழியுங்கள்
உதாரணமாக 35 வயது மதிக்க ஒரு நபருக்கு, தற்போது மாதம் ₹40000 செலவு ஆகிறதென்றால், 60 வருடம் கழித்து அவருக்கு மாதம் வேண்டிய தொகை என்ன என்று கணக்கிடுவோம்.
எ.தொ= 40000 x (1+ 0.06)^25 = ₹ 1,71,675. தோராயமாக ஓராண்டுக்கு 20 லட்ச ரூபாய் அவருக்கு தேவைப்படும்!
(உங்களின் வயதுக்கு ஈசியாக கணக்கு போட நீங்கள் AI-யை பயன்படுத்தலாம்).
என்னுடைய 60-வது வயதில் ஆண்டுதோறும் 20 லட்ச ரூபாய் இலகுவாக கிடைக்கும் என்று சொல்பர்கள், இதற்கு மேல் கட்டுரையைப் படிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் என்னால் முடியாது என்று சொல்பவரா? நீங்கள் இன்னும் நிறைய நிதி சார்ந்து திட்டமிட வேண்டியுள்ளது என்று உங்களுக்கே விளங்கியிருக்கும்!

'லாபம்' வழங்கும் ரிட்டைர்மென்ட் பிளானிங் வெபினார்
* நீங்கள் 35-50 வயதுக்குள்ளானவரா?
* உங்களுடைய ரிட்டைர்மென்ட் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டுமா?
* அதற்கு இப்போதே எப்படி திட்டமிட வேண்டும் என்று தெரிய வேண்டுமா?
* உங்களுடைய ரிட்டைர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?
* ஒரு நிபுணரின் துணையோடு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்வது எப்படி என்று அறிய விருப்பமா?
* சீக்கிரமே முதலீட்டைத் துவங்க இருக்கிறீர்களா?

விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினாரில் கலந்துகொள்ள மறக்காதீர்கள்!தலைப்பு: Retirement Planning - Create a Tension-Free Retirement Lifeநாள்: ஜூலை 27, 2025, ஞாயிறுநேரம்: இந்திய நேரம் காலை 11:00 - மதியம் 12:30 மணி வரை பேச்சாளர்: சுரேஷ் பார்த்தசாரதி, நிதித் திட்டமிடல் நிபுணர் & நிறுவனர், myassetsconsolidation.com
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரிட்டைர்மென்ட் கால்குலேட்டர் ஷீட் இலவசமாக வழங்கப்படும்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/hnVUcgneh8j6m5rt8