செய்திகள் :

மே.இ.தீவுகள் டி20 தொடர்: இங்லிஸ், கிரீன் சிக்ஸர் மழை.! ஆஸி.க்கு 2-வது வெற்றி!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2 வது போட்டி கிங்ஸ்டன் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 9 ரன்களில் மேக்ஸ்வெல்லிடம் சிக்கினார். ஆனாலும், மற்றொரு முனையில் அதிரடி காட்டினார் பிரண்டன் கிங். ஹெட்மையர் 14 ரன்களிலும் மீண்டும் மேக்ஸ்வெல்லிடம் சிக்க, ரோஸ்டன் சேஸ் 16 ரன்கள், செர்ஃபைன் ரூதர்போர்டு 0 ஆகிய இருவரையும் ஆடம் ஸாம்பா வீழ்த்தினார்.

இருப்பினும் அதிரடி ஆட்டத்தைக் குறைக்காத பிரண்டன் கிங் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து ஆடம் ஸாம்பாவின் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார்.

தன்னுடைய கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய ரஸல், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார். குறிப்பாக துவார்ஷியஸ் வீசிய 14 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஸல் 15 பந்துகளில் 2 பவுண்டரி - 4 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மற்ற வீரர்கள் ரோமன் பவல் 12 ரன்கள், ஹோல்டர் 1 ரன், மோட்டி 18 ரன்கள், அல்ஜாரி ஜோசப் 2 ரன்கள் எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஸாம்பா 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், துவார்ஷியஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல் 12 ரன்களில் (ஒரு பவுண்டரி - ஒரு சிக்ஸர்) ஹோல்டரிடமும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் (ஒரு பவுண்டரி - 2 சிக்ஸர்) அல்ஜாரி ஜோசப்பிடமும் வீழ்ந்தனர்.

5.3 ஓவர்களில் 2 விக்கெட்டு 42 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியை, விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லிஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சிக்ஸர் மழை பொழிந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி, 173 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய ஜோஸ் இங்லிஸ் 33 பந்துகளில் 7 பவுண்டரி - 5 சிக்ஸருடன் 78 ரன்களும், கிரீன் 3 பவுண்டரி - 4 சிக்ஸருடன் 56 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஜோஸ் இங்லிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஹோல்டர், ஜோசப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது போட்டி பாசெட்டெரில் வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

Inglis, Green power Australia to comprehensive T20 win

இதையும் படிக்க :அதிரடி ஆட்டத்துடன் விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸல்! கடைசிப் போட்டியில் சிறப்பு கௌரவம்!

பிரேக்கிங் பேட்: கிறிஸ் ஓக்ஸ் வீசிய பந்தில் உடைந்த ஜெஸ்வாலின் பேட்!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் விளையாடும்போது இந்திய வீரர் யஷஸ்வி ஜெஸ்வாலின் பேட் உடைந்த விடியோ வைரலாகி வருகிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டரில் இன... மேலும் பார்க்க

விராட் கோலியை முந்திய கே.எல்.ராகுல்..! வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டரில் இன்று தொட... மேலும் பார்க்க

வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மகளிருக்கு எதிராக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்... மேலும் பார்க்க

யார் இந்த அன்ஷுல் கம்போஜ்? ரஞ்சியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்!

இந்திய டெஸ்ட் அணியில் 318-ஆவது நபராக அறிமுகமாகியுள்ள இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் (24 வயது) மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் கடந்... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 100-ஆவது போட்டியில் முகமது சிராஜ்..! பணிச் சுமையற்ற வீரர்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது 100-ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருக்கிறது. தற்போது, மான்செஸ்டரில் 4-ஆவ... மேலும் பார்க்க

ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இந்திய மகளிரணி புதிய வரலாறு படைத்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிரணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விள... மேலும் பார்க்க