பத்த வைச்சுட்டியே பரட்டை... வைரலாகும் பவர்ஹவுஸ்!
கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பவர்ஹவுஸ் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படமென்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
படத்திற்கான புரமோஷன்களும் துவங்கியுள்ளதால் தமிழ் சினிமாவில் கூலி திரைப்படம் பெரிய வணிக வெற்றியைக் ஈட்டலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் பாடகர் அறிவு வரிகளில் உருவான, ’பவர்ஹவுஸ்’ பாடல் நேற்று (ஜூலை 22) வெளியானது.
This one#PowerHousepic.twitter.com/ZnnlvbzMKd
— Mohd Haz☄️ (@iamseenihasan) July 22, 2025
படத்தின் மூன்றாவது பாடலான இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ‘முடிஞ்சா தொடுடா பாக்கலாம்’, ‘say my name' போன்ற வசனங்கள் ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இதையும் படிக்க: முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!