சூர்யா - 50! அன்பைக் கொட்டிய அன்பான ரசிகர்கள்!
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். நேருக்கு நேர் படத்திலிருந்து ரெட்ரோ வரை 44 படங்களில் நடித்துள்ள சூர்யாவுக்கு தமிழில் மட்டுமல்லாது கேரளம் மற்றும் தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
சூர்யாவின் திரைப்பயணம் வெற்றி, தோல்விகளால் நிறைந்திருந்தாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதரவு அளித்தே வந்திருக்கின்றனர்.
காரணம், சினிமாவைத் தாண்டி கல்வி, சமூகம் என பல விஷயங்களுக்கு மிகப்பெரிய நிதியுதவிகளைச் செய்து வருகிறார். முக்கியமாக, அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பல ஆயிரம் பட்டதாரி மாணவர்களை உருவாக்கி பலருக்கும் முன்மாதிரியான ஆளுமையாகவும் சூர்யா திகழ்கிறார்.
Happy Happy Birthday @Suriya_offl may godbless you with lots of happiness and success
— Rajsekar Pandian (@rajsekarpandian) July 23, 2025
Here’s the selfie video for #AnbaanaFans ❤️❤️ pic.twitter.com/orUfldWDu5
இந்த நிலையில், இன்று நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாளுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்படி, ரசிகர்களில் சிலர் சூர்யாவின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் வாழ்த்தக் காத்திருந்தனர்.
அப்போது, வெளியே வந்த சூர்யா ரசிகர்களுக்குக் கையசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி செல்ஃபி விடியோவை எடுத்துக்கொண்டார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!