நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!
மும்பை: இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337.83 புள்ளிகள் உயர்ந்து 82,538.17 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல வேகம் இழந்தது, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் சரிந்து 82,186.81 ஆகவும் 50-பங்குகள் கொண்ட நிஃப்டி 29.80 புள்ளிகள் சரிந்து 25,060.90 ஆக நிலைபெற்றது.
ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த தெளிவின்மை மற்றும் எஃப்ஐஐ-களின் தொடர் லாப முன்பதிவுகள் ஆகியவற்றால் சந்தை உணர்வு வெகுவாக பாதித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மாருதி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் எடர்னல், எச்டிஎஃப்சி லைஃப், டைட்டன், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை உயர்ந்தன. அதே நேரத்தில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜியோ ஃபைனான்சியல், ஐஷர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை பங்குகள் சரிந்து முடிந்தன.
உணவு விநியோகம் மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல், ஜூன் காலாண்டு முடிய ரூ.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக அறிவித்ததையடுத்து எடர்னல் பங்குகள் 10.56 சதவிகிதம் உயர்ந்தன.
மீடியா துறை குறியீடு 2.5 சதவிகிதமும், பிஎஸ்யு வங்கி குறியீடு 1.6 சதவிகிதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 1 சதவிகிதமும், ஆட்டோ குறியீடு 0.6 சதவிகிதமும் மற்றும் பார்மா குறியீடு 0.9 சதவிகிதம் சரிந்தது முடிந்தன.
புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுக்கான சீன காப்புரிமையைப் பெற்றதால் கோதாவரி பயோஃபைனரீஸின் பங்குகள் 5 சதவிகிதமும், நிகர லாபம் ஆண்டுக்கு 44% அதிகரித்து ரூ.67 கோடியாக உயர்ந்ததால் எஸ்எம்எல் இசுசு பங்குகள் 10 சதவிகிதம் உயர்ந்தன.
நிர்வாகத்தின் நேர்மறையான விமர்சனத்தால் எடர்னல் பங்குகள் 10 சதவிகிதம் உயர்ந்தன. அதே வேளையில் 2.5 சதவிகிதம் பங்குகளை தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளருக்கு ஒதுக்கியதால் ராஜூ இன்ஜினியர்ஸின் பங்குகள் 2.5 சதவிகிதம் சரிந்தன.
தானே யூனிட்டை விற்பனை செய்ததில் பிரமல் பார்மா பங்குகள் 3 சதவிகிதம் சரிந்த நிலையில் திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நாளைய வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக உயர்ந்து முடிந்தன.
எடர்னல், குஜராத் மினரல், ராம்கோ சிமென்ட்ஸ், டால்மியா பாரத், ஸ்ரீ சிமென்ட்ஸ், விஷால் மெகா மார்ட், ஜேகே லட்சுமி சிமென்ட், யுபிஎல், ஷ்னைடர் எலக்ட்ரிக், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், யுடிஐ ஏஎம்சி, ஆதார் ஹவுசிங், ஐசிஐசிஐ வங்கி, ஈஐடி பாரி உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.1,681.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,578.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.97 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு அமெரிக்க $68.54 ஆக உள்ளது.
இதையும் படிக்க: 47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி