‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!
புதுதில்லி: சோலார் தகடுகளை தயாரிப்பாளர் மற்றும் இ.பி.சி. சேவை வழங்குநருமான சோலெக்ஸ் எனர்ஜி ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் வருவாய் 84 சதவிகிதம் அதிகரித்து ரூ.260 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
என்எஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.141 கோடி வருவாயை ஈட்டியது.
வலுவான தொடக்கத்துடன், சோலெக்ஸ் எனர்ஜி அதன் முதல் காலாண்டு முடிவில், அதன் செயல்பாடுகளிலிருந்து ரூ.260 கோடி ஒருங்கிணைந்த வருவாயை எட்டியுள்ளதாக தெரிவித்தது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சேதன் ஷா தெரிவித்ததாவது:
சோலெக்ஸ் அதன் தயாரிப்பு பிரிவை விரிவுபடுத்துதல், உற்பத்தி ஆட்டோமேஷன் & செயல்திறனை மேம்படுத்துதல், அடுத்த தலைமுறை தொகுதி தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தியதால் முதல் காலாண்டில் அதன் வருவாய் ரூ.260 கோடியாக உயர்ந்து என்றது.
குஜராத்தை தளமாகக் கொண்ட சோலெக்ஸ் எனர்ஜி, சோலார் தகடுகளை உற்பத்தி திறன் 1.5 ஜிகாவாட்டிலிருந்து 15 ஜிகாவாட்டாக அதிகரிக்க முயல்வதாகவும், அதற்கு சுமார் ரூ.8,000 கோடி செலவாகும் என்றது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!