சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு
சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆதரவு நிறுவனமான பிலோனம் ரூ. 6.50 கோடி வரை நிதியை திரட்டியது.
புத்தாக்கங்களை வணிக ரீதியாக மாற்றுவதற்கு ஆதரிக்க (இன்குபேட்டர்) சென்னை ஐஐடி-இல் பிலோனம் என்கிற நிறுவனம் அமைக்கப்பட்டது.
பிலோனம், மேம்பட்ட தரவுத்தள முறையான பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்றவை மூலம் சுகாதாரம், வாக்களிப்பு போன்ற துறைகளில் உணர்திறன் வாய்ந்த தொழில்களில் தரவு பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மின்னணு பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பிலோனம் நிறுவனத்தில் முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.
இதற்கான நிகழ்வில் இந்த இன்குபேட்டர் பிலோனம்-ஐ நிறுவிய சென்னை ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் பேசியது:
தென்னிந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அமைப்புகளுடன் இணைந்து உணர்திறன் வாய்ந்த உறுப்பு தான தரவுத்தளங்களை நிர்வகிக்க, தொலைதூரத் தேர்தல்களை நடத்த பிளாக்செயின் அடிப்படையில் "பிளாக்வோட்' மென்பொருளைப் பயன்படுத்தி புதிய பயன்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.