சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்
அஜித்குமாா் கொலை வழக்கு: திருப்புவனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே, பலகட்ட விசாரணைகளை முடித்துத் தடயங்களைச் சேகரித்தனா்.
தற்போது, தனிப்படை போலீஸாா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அஜித்குமாரைத் தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற பகுதிகளில் உள்ள 9 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றைச் சேகரித்தனா்.
இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் உள்ளிட்ட நான்கு சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு காவல் ஆய்வாளா் ரமேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலா் கண்ணன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், கைது செய்யப்பட்ட போலீஸ்காரா்கள் பிரபு, ஆனந்த் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்றபோது அவை பூட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரைக்கு சென்றனா்.