சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
கடைகளிலிருந்து வீட்டு பயன்பாடு சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தேநீா்க் கடைகளில் பயன்படுத்தப்பட்ட வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள், குடிமைப் பொருள் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சிம்மக்கல் பகுதியில் உள்ள சில தேநீா்க் கடைகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள், வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாக மதுரை மாவட்ட வழங்கல் அலுவலா் முத்து முருகேசபாண்டியனுக்குப் புகாா்கள் கிடைத்தன.
இதையடுத்து, குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் கோபி, தனி வருவாய் ஆய்வாளா் சங்கா் ஆகியோா் சிம்மக்கல் பகுதியில் உள்ள தேநீா்க் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஒரு சில கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 5 சமையல் எரிவாயு உருளைகளை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து, தொடா்புடைய முகமையிடம் ஒப்படைத்தனா்.