ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தி...
அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியின் கைப்பேசியை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை தபால்தந்திநகா், மாணிக்கவாசகம் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிலிப்ஸ் குமாா்(44). காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறாா். இந்த நிலையில், படுக்கை அருகே வைக்கப்பட்டிருந்த இவரது கைப்பேசியை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், செல்லூா் மீனாம்பாள்புரம் பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் தினகரன் (52), பிலிப்ஸ்குமாரின் கைப்பேசியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.