Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது
மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அடிப்படையில், மதுரை மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவருடன், மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்த பாட்டாள் (38) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், இருவருக்கும் குப்பைகள் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டது. இதனிடையே, திங்கள்கிழமை காலை கோடீஸ்வரன் கோச்சடை பகுதியிலிருந்து குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த போது, முடக்குச்சாலை அருகே தூய்மைப் பணியாளரான பாட்டாள் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டாா். அப்போது பாட்டாள் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோடீஸ்வரனைக் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து பாட்டாளை கைது செய்தனா்.