கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
நலம் தரும் ஸ்டாலின் திட்டம்: ஆக. 2-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!
நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை வரும் ஆக. 2 ஆம் தேதி சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்) மற்றும் மருத்துவம் சார்ந்த ( allied health care) படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், ”வரும் 2 ஆம் தேதி நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் தொடக்கி வைக்க உள்ளார்.
1256 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மூன்று இடங்களில் முகாம் நடைபெற உள்ளது” என்றார்.
நாமக்கல் கிட்னி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ அப்பகுதியில் கிட்னி முறைகேடு சம்பவம் இப்போது மட்டும் நடைபெறவில்லை. 2019 ஆம் ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
அப்போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது பரப்புரையில் கிட்னி திருட்டுச் சம்பவம் நடைபெற்று வருவதாக பேசி வருகிறார், அங்கு நடைபெற்று இருப்பது கிட்னி திருட்டு அல்ல, கிட்னி முறைகேடு சம்பவம்.
அந்த முறைகேடு சம்பவத்தையும் விசாரிக்க ஐஏஎஸ் தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது” என்றார்.
இதையும் படிக்க: திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்!!