செய்திகள் :

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்பெட்டி: வெற்றிகரமாக சோதித்து ஐசிஎஃப் சாதனை

post image

புது தில்லி: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் பெட்டியை உருவாக்கி, ஐசிஎஃப் தொழிற்சாலையில் இயக்கிப் பார்த்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜனில் இயங்கம் ரயில் பெட்டி ஒன்று, தண்டவாளத்தில் இயக்கப்படும் விடியோவை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அஸ்வினி வைஷ்ணவ், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் பெட்டி, சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்து.

இந்தியா 1,200 ஹெச்பி திறனுடன் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது. இது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்ழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் இருக்கும் என்பதால், இதன் உருவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தயாரிப்புகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1200 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் பெட்டியை தயாரித்து வருகிறது இந்திய ரயில்வே. இது, ரயில்வேயின் புத்தாக்கத்துக்கு மணிமகுடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல நாடுகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First Hydrogen powered coach (Driving Power Car) successfully tested at ICF, Chennai.

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க