மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ரூ.1,000 கோடி வசூலிக்க படம் இயக்கவில்லை: லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமிர் கான், உபேந்ந்திரா, நாகார்ஜுனா என நட்சத்திர பட்டாங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
என்னுடைய படங்களை ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்க்கும் ரசிகனுக்கு படம் பிடித்திருந்தால் போதுமானது.
ஏன் ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும், இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாய் வசூலித்தால் எனக்கும் நன்றாகத்தான் இருக்கும்.
இந்தப் படம் அதை மையமாக வைத்து எடுக்கவில்லை. நான் எந்தப் படத்தையும் அப்படி எடுப்பதில்லை.
படத்தில் வேலைப் பார்ப்பவர்கள் சிலர் ஆர்வக் கோளாறில் அப்படி சொல்லலாம். அது தேவையில்லாதது. ஆனால், கடைசியில் அதற்கு நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார்.