தொடங்கியது விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம்!
41 வயது... 41 பந்தில் சதம்... ஏபிடி வில்லியர்ஸுக்கு குவியும் வாழ்த்துகள்..!
தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியின் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.
இந்தத் தொடரில் நேற்று இரவு தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டி செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 152/6 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக முஸ்டர்ட் 39 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் பர்னல், தஹிர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
இதில் தொடக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தப் போட்டியில் 41 பந்துகளில் சதம் அடித்தார். அவருக்கு வயதும் 41 என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்கெனவே, ஏபிடி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
41-year-old 41-ball century #WCL2025#ABD#ABDeVillierspic.twitter.com/fviC9HK8Tl
— FanCode (@FanCode) July 24, 2025