Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்ச...
மான்செஸ்டர் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, 332 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பந்த் 54 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 46 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியம் டாஸன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வலுவான நிலையில் இங்கிலாந்து
இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 25) இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஸாக் கிராலி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் இருவரும் அரைசதம் கடந்தனர். உணவு இடைவேளையின்போது, ஆலி போப் 70 ரன்களுடனும், ஜோ ரூட் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமிருக்க, இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 26 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!
England are in a strong position at the lunch break in their first innings of the fourth Test against India.