மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி மீண்டும் இணைந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத ஹாசன் அலி மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடர்கிறார்.
டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்
சல்மான் அலி அகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபாஹீம் அஷரஃப், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரௌஃப், ஹாசன் அலி, ஹாசன் நவாஸ், ஹூசைன் டலாட், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகாப்ஸதா ஃபர்ஹான், சைம் ஆயுப், ஷாகின் ஷா அஃப்ரிடி, சூஃபியான் முக்யும்.
ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்
முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், அப்துல்லா சஃபீக், அப்ரார் அகமது, ஃபாஹீம் அஷரஃப், ஃபகர் ஸமான், ஹாசன் அலி, ஹாசன் நவாஸ், ஹூசைன் டாலட், முகமது ஹாரிஸ், நசீம் ஷா, முகமது நவாஸ், சைம் ஆயுப், ஷாகின் ஷா அஃப்ரிடி, சூஃபியான் முக்யும்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற இளம் வேகப் பந்துவீச்சாளர்களான அப்பாஸ் அஃப்ரிடி, அகமது டேனியல் மற்றும் சல்மான் மிர்ஸா ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!
The Pakistan Cricket Board has announced the Pakistan squad for the T20 and ODI series against the West Indies.