கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. முத்தரப்பு டி20 தொடர் நிறைவடைந்தவுடன் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிளன் பிலிப்ஸுக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
BLACKCAPS batting allrounder Michael Bracewell will replace the injured Glenn Phillips for the first Test against Zimbabwe. Full story ⬇️ #ZIMvNZ#CricketNationhttps://t.co/salAM9Ehn1
— BLACKCAPS (@BLACKCAPS) July 25, 2025
இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் பேசியதாவது: காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கிளன் பிலிப்ஸ் விலகியது அணியில் ஒரு இடத்தை உருவாக்கியது. கிளன் பிலிப்ஸுக்குப் பதிலாக அவருக்கு இணையான மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைக்கேல் பிரேஸ்வெல்லின் அனுபவம் மற்றும் திறமை நியூசிலாந்து அணியின் சமநிலையை உறுதி செய்யும். முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மைக்கேல் பிரேஸ்வெல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 30 முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்: இங்கிலாந்தில் அபாரம்!
batting allrounder Michael Bracewell will replace the injured Glenn Phillips for the first Test against Zimbabwe.