செய்திகள் :

பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு

post image

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சர்வதேச சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டது, இதில் சென்னை அடையாறு முகத்துவாரத்தில் பங்கேற்ற நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அலையாத்தி தோட்டம் எழுப்புதல் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மேலும் இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ மற்றும் அரசு அதிகாரிகள் கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

சதுப்பு நில சூழல் பாதுகாப்பு நாளை முன்னிட்டு சென்னை அடையாறு முகத்துவாரத்தில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் நோக்கத்தில் அதற்கான மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடலோரங்களில் உள்ள 14 மாவட்டங்களிலும் இந்த பணிகளை மேற்கொள்வதன் மூலம், கடல் அரிப்புகளை தடுக்க இந்த அலையாத்திக் காடுகள் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்தும் கடலோரப் பகுதிகளை பாதுகாக்க ஒரு தொலைநோக்கு திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டு கூடுதலாக 6 மரக்கன்றுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர். அங்குள்ள பொன்னேரி ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் பாசன பரப்பு ஏறத்தாழ 1,374 ஏக்கர் உள்ளது. அந்தப் பாசன பகுதிகளுக்கும், அங்குள்ள விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், அந்த ஏரியை சுற்றுலா தளமாக மாற்றவும் தமிழக அரசு சார்பில் ரூ.19.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏரியின் புனரமைப்பு மற்றும் நீர் வரத்து கால்வாய்கள், உபரி நீர் வழி கால்வாய்கள் ஆகியவற்ற மறுசீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கங்கைகொண்ட சோழபுரம், குருவாயூரப்பர் கோவில் என சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கும் பாசங்களுக்கும் மாபெரும் வரப் பிரசாதமாக இருக்கும்.

ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1000-ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரத்து வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமையாகும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்

It is an honor for Tamil Nadu that the Prime Minister is visiting Gangaikonda Cholapuram

வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்: மோடி

புது தில்லி: கார்கில் போரில் நமது வீரர்கள் செய்த தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், விஜய் திவாஸ், இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஒப்பற்ற துணிச்சலையும், வீரத்... மேலும் பார்க்க

கார்கில் விஜய் திவாஸ்: வீரர்களுக்கு முர்மு அஞ்சலி!

புது தில்லி: கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார்கில் போரில் தைரியத்துடனும் வீரத்துடனும் போராடிய வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ட... மேலும் பார்க்க

அந்தமான் கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டா் அளவு கோலில் 4.9-ஆகப் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி: மத்திய அரசு தகவல்

புதுதில்லி: கடந்த 2021 இல் இருந்து 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநிலங்களவை... மேலும் பார்க்க

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வைகோவின் செயல்பாடுகள் தொடர்ந்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.... மேலும் பார்க்க