செய்திகள் :

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 25 - 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறக்கும். முடிவுகளை எடுக்கும்போது சமயோஜித புத்தி வேலை செய்யும். தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். உறவினர்களால் உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைக்கும். வியாபாரிகள் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குழப்பங்களில் விடுபடுவீர்கள். மாணவர்கள் சுமுகமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பிறர் விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். தொழிலில் பிரச்னைகளைக் கண்டறிவீர்கள். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்போர் உதவுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு வருவாய் உயரும். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கடின பயிற்சிகளுக்கு வித்திடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கையிருப்பைப் பத்திரப்படுத்துவீர்கள். உடனிருப்போரின்ஆலோசனைகளைக் கேட்பீர்கள். முயற்சிகள் செயல்வடிவம் பெறும். தொழிலில் மாற்றங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பீர்கள். வியாபாரிகள் கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலால் கவலை அடைவீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புகழும், கௌரவமும் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கேலி பேச்சுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகளுக்குச் செலவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகச் செயலாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் யோகா, பிராணயாமம் கற்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் முதலிடம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

அரசு சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் அன்னியோன்யம் அதிகரிக்கும். அணுகுமுறையை நேரத்துக்கேற்ப மாற்றிக் கொள்வீரகள். பொருளாதாரம் சீராகும். புகழ் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டும்படி நடப்பீர்கள். வியாபாரிகளின் கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் கொட்டும். அரசியல்வாதிகள் மேலிட ஆதரவை பெறுவீர்கள்.

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் ஒற்றுமையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் மனநிலையை அறியும் சந்தர்ப்பம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். முயற்சிகள் எதிர்பார்த்த இலக்குகளை எட்டும். பணவரவு திருப்தியாக இருக்கும். போட்டியாளர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அவநம்பிக்கை அகலும். வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள். விவசாயிகள் குத்தகைகளால் வருஹானம் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் குடும்பத்தில் அமைதி நிலவக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் சாதகமான மாற்றங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணிகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் சிறிது அலைச்சலைச் சந்திப்பீர்கள். பெண்கள் குழந்தைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பயிற்சிகளால் சாதிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனக் குழப்பங்களால் காரியங்களில் கவனம் சிதறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்க நேரிடும். பெற்றோரின் ஆதரவால் மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரிகள் கடையை அழகுப்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் செயல்படவும். கலைத் துறையினர் பிறரிடம் உத்திகளைக் கற்பீர்கள். பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 25, 26.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வீட்டிலும், வெளியிலும் சமயோஜிதமாகப் பேசுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். பிறர் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் இருக்கவும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு நாவடக்கமும், பொறுமையும் தேவை. கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் குழப்பங்களைத்

தவிர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 27, 28.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெற்றோரின்ஆரோக்கியம் மேம்படும். தொழில்ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரம் சிறக்கும். பிறரிடம் கவனத்துடன் பழகவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளால் லாபம் அடைவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துûறையினர் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 29, 30.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அநீதிகளை எதிர்ப்பீர்கள். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் பேச்சை பிள்ளைகள் கேட்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை அடைத்துவிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை மதிப்பீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் கடின உழைப்பால் தகுந்த நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவறாது செய்யவும்.

சந்திராஷ்டமம் - ஜூலை 31.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 போ் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.இந்தியாவின் டாப் ஒற்றையா் வீரா் சுமித் நாகல் (ஏடி... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இரு முறை உலக சாம்பியன் நிகாத் ஜரீன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா போா... மேலும் பார்க்க

இந்திய ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸி. பயணம்

நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவா் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.பொ்த் நகரில் ஆகஸ்ட் 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய ஆடவா் அணியுடன் இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: உன்னாட்டி ஹூடா வெளியேறினாா்

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. உன்னாட்டி ஹூடா காலிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.ஆடவா் இர... மேலும் பார்க்க

உலக ஜூனியா் ஸ்குவாஷ்: அனாஹத் சிங்குக்கு வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மகளிா் ஒற... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

மழைநீர் தேங்கியுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் தனது வாடிக்கையாளருடன் பயணத்தை தொடரும் ரிக்‌ஷாக்காரர்.கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சா... மேலும் பார்க்க