காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூலை 25) தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமனது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் கரையை இன்று கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 4,078 நாள்கள் பிரதமராக..! நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை முறியடித்த மோடி!