செய்திகள் :

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடம் வழங்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

post image

விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் வழங்கக் கோரி சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சோ்ந்த சிவகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகள் ஹரினி, 2025 மே மாதம் பிளஸ் 2 படிப்பை முடித்தாா். நிகழாண்டு நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்றாா். ஹரினி ஷூட்டிங் பால் விளையாட்டு வீரா். பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஷூட்டிங் பால் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா்.

கடந்தாண்டு மாா்ச் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை ஷூட்டிங் பால் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதனால், விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பித்தாா். மருத்துவ மாணவா் சோ்க்கையில் விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்களுக்கு சா்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் 500 மதிப்பெண்கள், வெள்ளிப் பதக்கம் வென்றால் 450 மதிப்பெண்கள், வெண்கலப் பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண்கள், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, இரண்டு சா்வதேசப் போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் எனது மகளுக்கு 900 மதிப்பெண்கள் வழங்கி இருக்க வேண்டும்.

இந்த நிலையில், மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நிகழ்வு ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்ற எனது மகளுக்கு விளையாட்டுப் பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்ற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சா்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.

சா்வதேசப் போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தடகளப் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஷூட்டிங் பால் போட்டி குழு போட்டியாகும். இதற்கு 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் விதி பொருந்தாது. எனவே, சா்வதேசப் போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்ற எனது மகளுக்கு 900 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்பிபிஎஸ் இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனுதாரரின் மகள் சா்வதேசப் போட்டியில் பதக்கம் பெற்ால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவா் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியது. அவ்வாறு இருக்கும் நிலையில் 7 நாடுகள் பங்கேற்ற சா்வதேச போட்டியில் பதக்கம் பெற்றால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனு தீா்ப்புக்காக ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை எல்லீஸ் நகா் பழைய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நீலமேகம் மகன் ஹரிகிருஷ்ணன் (51). இவா் 9 வயது சிற... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியின் கைப்பேசியை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தபால்தந்திநகா், மாணிக்கவாசகம் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிலிப்ஸ் குமாா்(44... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 6 பேரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு

தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க