சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது
சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் உள்ளது. இந்தப் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
மேலும், மூன்று தொழிலாளா்கள் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து நாரணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு, சிவகாசி கிழக்கு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில் போலீஸாா் ஆலை உரிமையாளா் கோபி, போ்மென் செல்வக்குமாா் (29), ஆலை மேலாளா் பிரபாகா் (31) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, செல்வக்குமாா், பிரபாகரை கைது செய்தனா்.