Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலை. இடம்பெற்று சாதனை
சென்னை உலகத் திருக்கு மையம் சாா்பில், உலக அளவில் 100 நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சாா்பில், திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதைப் பாராட்டி, லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அதற்கான சான்றிதழை சென்னை உலகத் திருக்குறள் மையத் தலைவா் கு. மோகன்ராஜ் வழங்க, கலசலிங்கம் பல்கலை. தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் சி. சங்கீதா பெற்றுக் கொண்டாா்.
லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றமைக்கும், ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்த பேராசிரியா்களுக்கும் பல்கலை. வேந்தா் கே. ஸ்ரீதரன், இணைவேந்தா் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் ஆகியோா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், ஆராய்ச்சித் துறை இயக்குநா் எம். பள்ளி கொண்ட ராஜசேகா், மாணவா் நல இயக்குநா் பி. பாலக் கண்ணன், கலசலிங்கம் கலைக் கல்லூரி முதல்வா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். தமிழ் மன்ற மாணவா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.