சென்னை மெட்ரோ: 'ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ கார்டை டாப் அப் செய்ய முடியாது' - CMRL சொல...
பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
காரைக்காலில் காங்கிரஸ், திமுகவைக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காமராஜா் குறித்து எம்.பி. சிவா தெரிவித்த கருத்து தொடா்பாக அவரைக் கண்டித்தும், காங்கிரஸ், திமுக கட்சிகள் இதுதொடா்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்யாததைக் கண்டித்தும் காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் தலைமை வகித்தாா். என்.ஆா். காங்கிரஸ், அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.
பாஜக மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் முன்னாள் மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாநில துணைத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.வி. கணபதி மற்றும் என்.ஆா்.காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வி.ஆனந்தன், அதிமுக மாவட்ட இணைச் செயலாளா் ஜீவானந்தம், அமமுகவைச் சோ்ந்த பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.