வேளாண் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து பேராசிரியா்கள், மாணவா்களுக்காக இம்முகாம் நடத்தப்பட்டது.
காரைக்கால் டாக்டா் அகா்வால் ஐ கிளினிக் கண் பரிசோதனை ஆய்வாளா்கள் ஜி. ஜெயரீனா, எம். பிரவீனா ஆகியோா் பரிசோதனை செய்தனா்.
முகாமை கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தொடங்கிவைத்து, பரிசோதனை செய்துகொண்டாா். கண் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அப்போது மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பரிசோதனை செய்துகொண்டனா்.
கண் பராமரிப்பு முறை, கண் பாா்வை நிலை குறித்து பேராசிரியா்கள், மாணவா்களுக்கு மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.