வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!
தேசிய சராசரியை விஞ்சினோம்; மிஞ்சினோம்.! முதல் மாநிலமாக உயருவோம்.! - முதல்வர் ஸ்டாலின்
தேசிய சராசரியை விஞ்சினோம்; திமுக 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2 ஆம் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு நேற்று தெரிவித்திருந்தது. புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு 2024-2025 ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம்.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்வர் மு.கஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவரும் புதுமையான திட்டங்கள்தான் காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தச் சாதனையானது, தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.
"எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திமுக ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது. கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-2021-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1.43 லட்சம் மட்டுமே. நமது ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவிகிதம் வளர்ச்சியோடு 2024-2025 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016 - 2017 ஆம் ஆண்டு முதல் 2020 - 2021 ஆம் ஆண்டு வரை 4.42 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான ஆட்சிக்கு ஒரு சான்றாகும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனை மறுபதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள திமுக 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
Chief Minister Stalin proudly stated that we have surpassed the national average; we will rise to become the first state in DMK 2.0.
இதையும் படிக்க :மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?