செய்திகள் :

தாமிரபரணி படுகொலை நினைவு தினம்: "மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம்" -இயக்குநர் மாரி செல்வராஜ்!

post image

23.07.1999. நெல்லை மாவட்டத்தைத் தாண்டி, மாஞ்சோலை என்ற பெயர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறிமுகமான நாள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மூன்று மாதங்கள் பிடித்தம் செய்த அரைநாள் சம்பளத்தை திரும்ப வழங்கிடுவது, அது தொடர்பான போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 653 தொழிலாளர்களை விடுதலை செய்தல், கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்று பல்வேறு முக்கியத் தலைவர்கள், 3000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பேரணி தாமிரபரணி ஆற்றின் கரை அருகே கொக்கிரகுளத்தில் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கிக் கிளம்பியது.

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள்

மனு கொடுக்க வந்த மக்கள் எல்லா பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையால் தாக்கப்பட்டனர். காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி கரையில் சுற்றி வளைத்து நடத்திய காவல்துறையின் கொடூரத் தாக்குதலை “தமிழக ஜாலியன் வாலாபாக்” என்று அடுத்து வந்த நாட்களில் பத்திரிகைககள் தலையங்கம் எழுதின. 

அப்பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் இன்றைய முன்னணி தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான மாரி செல்வராஜ். அன்று அவருக்கு வயது 15. தனது நேரடி கள அனுபவத்தினை 2012ல் 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற 25 பக்க கதையாக எழுதினார். நெஞ்சை உறையவைக்கும் ரத்த சாட்சி அது.

மாஞ்சோலை: கூலி உயர்வுப் போராட்டம்; 17 பேரின் உயிரைக் காவு வாங்கிய தாமிரபரணி படுகொலை!

தமிழக வரலாற்றில் நடந்த பெரும் கரும்புள்ளியாக அமைந்த அந்த தாமிரபரணி படுகொலையின் நினைவு தினம் இன்று. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், "ஜூலை -23 தங்களின் உரிமைக்காக பெரும் அதிகாரத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் ஆணவத்தையும் எதிர்த்து போரிட்டு இன்னுயிர் நீத்த எம் மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

விகடனில் வெளியான வழக்குரைஞர் இ.இராபர்ட் சந்திர குமார் எழுதியிருக்கும் '1349/2 எனும் நான்; மாஞ்சோலை - மலையும் மனிதர்களும்' தொடரை வாசிக்க, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

மாஞ்சோலை

“கம்பெனிக்காரங்களுக்கு நாங்க கூலிக்கான நம்பர், அரசியல்வாதிகளுக்கு வெறும் ஓட்டுக்கான நம்பர்!” - manjolai documentary film - Vikatan

Suriya: 'நண்பன்', 'முகமூடி', 'சென்னையில் ஒரு மழைக்காலம்' - சூர்யா தவறவிட்ட திரைப்படங்களின் லிஸ்ட்!

சூர்யாவின் 50-வது பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'கருப்பு' திரைப்படத்தின் டீசரும் இன்று வெளியாகியிருந்தது. சரவணனாக அந்த டீசரில் அதகளப்படுத்தியிருந்தார் சூர்யா. Suriya's 'Karuppu' Movie T... மேலும் பார்க்க

Fahadh Faasil: "நான் பார்த்த முதல் தமிழ் படம் ரஜினி படம்தான்; அதுவும் அந்த சீன்..!"- ஃபகத் ஃபாசில்

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இழகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக... மேலும் பார்க்க

Surrender: 'மன்சூர் அலிகான் சாரின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன், அவரிடம் இருந்து...'- தர்ஷன்

கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’. அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்க... மேலும் பார்க்க