Fahadh Faasil: "நான் பார்த்த முதல் தமிழ் படம் ரஜினி படம்தான்; அதுவும் அந்த சீன்..!"- ஃபகத் ஃபாசில்
இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இழகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு ஃபகத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை. திருடனாக இருக்கும் ஃபகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது. அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் மறதியுடைய வடிவேலுவுடன் ஃபகத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

Maareesan Exclusive: வடிவேலு கேரக்டரில் பகத் பாசில்... பகத் பாசில் கேரக்டரில் வடிவேலு! - ‘மாரீசன்’
இதன் வெளியீட்டையொட்டி 'The Hollywood Reporter India' சேனலுக்குப் பேட்டியளித்திருக்கும் ஃபகத் ஃபாசில் தான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ஃபகத், "கல்லூரி படிக்கும்போது கட் அடித்துவிட்டு நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் 'பாட்ஷா', ரஜினிசார் படம்தான்.
'பாட்ஷா' படத்தின் ஒவ்வொரு காட்சியும் அருமையாகக் கட்டமைக்கப்பட்டு ரஜினி சாரின் காட்சிகளெல்லாம் புல்லரிக்க வைக்கும். அதுவும் தங்கச்சிக்கு கல்லூரியில் அட்மிஷன் போடும் காட்சி மிக அற்புதமாக இருக்கும்.
'என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்றெல்லாம் சொல்லிவிட்டு, அட்மிஷன் போட்டுவிட்டு வெளியே வந்தவுடன் 'அட்மிஷன் கெடச்சாச்சு' எனச் சொல்வார். அதற்கு தங்கச்சி, 'என்ன சொன்னீங்க' எனக் கேட்க, க்ளோஸ் அப் ஷாட்டில் 'உண்மையச் சொன்னேன்' என ரஜினி சார் சொல்லும்போது பிரமித்துப் போனேன். ரஜினி சார் படத்தில் ரசிகர்களைப் பார்த்து பேசுவதுபோல நடித்திருப்பதெல்லாம் என்னை ரொம்ப வியக்க வைத்திருக்கிறது.

கல்லூரியில் கோயம்புத்தூர், தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் என்னுடன் படித்ததால் தமிழ் பழகிவிட்டேன். அதனால், நிறையத் தமிழ்த் திரைப்படங்களும் பார்க்கத் தொடங்கிவிட்டேன். ரஜினிசாரின் 'பாட்ஷா'தான் நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...