செய்திகள் :

`இதை புரிஞ்சுக்காம என்னை ட்ரோல் பன்றாங்க' - 'நீயா நானா' வைரல் சிறுமியின் தாய் பேட்டி

post image

“அண்ணனுக்குதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். எனக்கு எதையும் செய்யவில்லை” என 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறுமி சாஸ்விகா தனது ஆதங்கத்தை க்யூட்டாக வெளிப்படுத்தியது, சமூக வலைதளங்களில் வைரலானதை அறிந்திருப்போம்...

அதில், சாஸ்விகாவின் அம்மா பெண் குழந்தை என்பதால் பாலின பேதத்தோடு நடந்துகொள்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அச்சிறுமியின் தாய் பிரவீனா வெங்கட்ரவியிடம் பேசினேன்.

என் பொண்ணுத்தான் உயிர்

“நாங்க சென்னைல குடியிருக்கோம். நகரத்துல இருந்துட்டு பாலின பாகுபாடு பார்ப்பாங்களா? என் மகளிடம் எந்த பாலின பேதமும் பார்க்கல. எனக்கு முதலில் பிறந்தது பையன். பெண் குழந்தைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான், பெண் குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு பெற்றுக்கிட்டேன். எனக்கு என் பொண்ணுத்தான் உயிர். நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்கேன்னுதான் ஃபேஷன் டிசைனே படிச்சு முடிச்சேன். பொங்கல், தீபாவளி மட்டுமில்ல அவளோட பிறந்தநாளுக்கு ஆசையா நானே அவளுக்கு புது ட்ரெஸ் டிசைன் பண்ணி தைத்து கொடுப்பேன். இன்னும் சொல்லப்போனா, என் பொண்ணுக்காகத்தான் ஏதாவது சேர்த்து வைக்கணும்னு ஹோம் டியூஷனும் எடுக்கிறேன்.

சாஸ்விகா பெற்றோருடன்

என் பையன் யாஷ்வந்த் பதினொனாவது படிக்கிறான். அவனை கராத்தே க்ளாஸ் அனுப்புறேன். ஆனா, என் பொண்ணும் கற்றுக்கணும்னு அவளும் தன்னம்பிக்கையா இருக்கணும்னு அந்த ஏஜ் வந்த உடனே சேர்த்துவிட்டேன். கராத்தேவுல ‘எல்லோ பெல்ட்’ வாங்கிட்டா. ட்ராயிங், ஸ்போர்ட்ஸ் எல்லாத்திலேயும் கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டு வருவா. நான், பாலின பாகுபாடு பார்க்குற அம்மாவா இருந்திருந்தா பையனை மட்டும்தானே கராத்தே க்ளாஸ் அனுப்பியிருப்பேன். ஏன் பொண்ணையும் சேர்க்கணும்? அப்படியிருந்தா அவன் படிக்கிற ஸ்கூல்லேயே அவளை ஏன் சேர்க்கணும்? இதை புரிஞ்சுக்காம என்னை ட்ரோல் பன்றாங்க.

போல்டா பேசினா...

'நீயா நானா' வுல கலந்துக்கப்போறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும். யாரையும் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னோம். வேற எந்த கண்டிஷனும் போடல. ஆனா, ஸ்டேஜ் பயம் இல்லாம, அவளா போல்டா பேசினா. என் பொண்ணை தைரியமா பேச வெச்சிருக்கேன்ல. என் பொண்ணு பேசுறதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தைங்க எல்லோருமே அவ பேச்சை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அக்கம்பக்கத்துல, டூர் போன இடத்துல எல்லாம் “பொண்ணை நல்லா தைரியமா வளர்த்திருக்கீங்க”ன்னு பாராட்டினாங்க.

சாஸ்விகா

இதையெல்லாம் தாண்டி, பையனுக்கு நிறைய வாங்கிக் கொடுக்கணும். இவளுக்கு கம்மியா வாங்கிக் கொடுக்கணும்னுல்லாம் இல்ல. சில ஃபுட் அவன் விரும்பி சாப்பிடுவான். சில ஃபுட் இவ விரும்பி சாப்பிடுவா. இன்னும் சொல்லப்போனா, இவளுக்குத்தான் அதிகமா வாங்கித் தருவேன். வேணும் வேணும்னு சொல்லி சரியா சாப்பிடமாட்டா. இன்னும் சொல்லப்போனா, பொண்ணுக்குத்தான் அதிகமா வாங்கித்தர்றேன்னு பையன் என்கிட்ட சண்டை போடுவான். அன்னைக்கு அவன் 'நீயா நானா'வுல இருந்திருந்தா அந்த உண்மையும் வெளிவந்திருக்கும்” என சிரிக்கிறார், பிரவீனா வெங்கட் ரவி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?

சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. நடிகை மீனா குமாரி உள்ளிட்ட சிலர் நேற்று ... மேலும் பார்க்க

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: மீண்டும் நீதிமன்றம் போகும் 'பிக் பாஸ்' தினேஷ்? என்ன பிரச்னை?

பிக் பாஸ் தமிழ் 7வது சீசனில் கலந்து கொண்டு டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நடிகர் தினேஷ் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் ... மேலும் பார்க்க

Serial Update: சர்ச்சையில் சிக்கிய அய்யப்பன் 'கயல்' சீரியலில் தொடர்வாரா? சேனல் எடுத்த அதிரடி முடிவு

'கயல்' தொடரைத் பார்த்து வரும் ரசிகர்கள் இப்போது கேட்கும் ஒரே கேள்வி ' மூர்த்தி சீரியலில் இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.தொடரில் கயலின் சகோதரனாக முக்கியமான இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அய்ய... மேலும் பார்க்க