ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, அரசு முறைப் பயணமாக, இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, நேற்று (ஜூலை 22), இலங்கையின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து உரையாடினார்.
அப்போது, பாதுகாப்புத் துறையின் திறன்மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், இயற்கை பேரிடர் காலங்களில் இருதரப்புக்கும் இடையிலான தயார்நிலைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பானது கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! பரிசோதனையில் வெற்றி