செய்திகள் :

பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

post image

பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.

பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங்களாக பல்வேறு நோய்களுடன் போராடி வந்தார். அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து அவரது குடும்பத்தினர் எந்தத் தகவலும் உறுதிபடுத்தவில்லை.

ஜான் மைக்கேல் மரணமடைந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார். இது வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத அளவுக்கு சோகமானது.

அவர் எங்களது குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். இந்த சோகமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

‘பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின்’ முன்னணி பாடகரான ஓஸி ஆஸ்போர்ன், அவரது குழுவில் அவரின் குரல் மிகவும் பிரபலமானதாக மாறியது. இவரது குரலில் அயர்ன்மேன், பாரனாய்டு, வார் பிக் போன்ற டிராக்குகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

20 ஆண்டுகளாக இசையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜான் மைக்கேல், மூன்று வாரங்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வமாக இசைக்குழுவில் இருந்து விலகினார். மீண்டும் ஜூலை 5 ஆம் தேதி இசைக்குழுவினருடன் இணைந்தார். அவருக்கு பிளாக் சப்பாத் சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

யுகே மியூசிக் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் யுஎஸ் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் இரண்டிலும் இரண்டு முறை கௌரவிக்கப்பட்டார் ஓஸி. அதனைத் தொடர்ந்து ஓஸியின் திறமைக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன.

அவற்றில் ஐவர் நோவெல்லோ விருது, 5 கிராமி விருதுகள், காட்லைக் ஜீனியஸ் விருது, கிளாசிக் ராக்கின் லிவிங் லெஜண்ட் பரிசு போன்றவைகளாகும். அதிலும், 12 முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அவருக்கு தெல்மா ரிலே, ஷரோன் என்ற இரு மனைவிகளும், ஐமி, கெல்லி, ஜாக், ஜெசிகா மற்றும் லூயிஸ் என்ற 5 குழந்தைகளும் உள்ளனர்.

Black Sabbath lead singer Ozzy Osbourne dies at 76, weeks after farewell show

இதையும் படிக்க :மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! பரிசோதனையில் வெற்றி

ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தாத, ஒய்சிடி-529 என்ற ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை, முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உடலில் விட்டமின் ஏ -வை தடுப்பதன் மூலம் விந்நணு உருவா... மேலும் பார்க்க

25வது முறை டிரம்ப் பேச்சு! 5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வெள்ளி விழா என காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை இரவு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டத... மேலும் பார்க்க

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ்... மேலும் பார்க்க