தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி
வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு
வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி முகமது தவ்ஹீா் இஸ்லாம், ஆசிரியா் ஒருவா், 25 சிறுவா்கள் அடங்குவல். உயிரிழந்தவா்களில் ஏராளமானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள்.
இதி தவிர, விபத்தில் காயடமைந்த 165 போ் பத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா். அவா்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
குா்மிடோலா விமானப்படை தளத்திலிருந்து திங்கள்கிழமை மதியம் புறப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 பிஜிஐ பயிற்சி விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தரா பகுதியில் உள்ள இரு மாடி பள்ளிக் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மக்கள் வசிப்பிடங்களைத் தவிா்க்க விமானி முயன்ாக ராணுவ மக்கள் தொடா்புப் பிரிவான ஐஎஸ்பிஆா் கூறியது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்து, விமானம் பள்ளிக் கட்டடத்தில் மோதியது.
கடந்த 2011-இல் இதே போன்ற 16 விமானங்களை வாங்கியுள்ள வங்கதேச விமானப்படை, இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைத்துள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைத்தும் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மைல்ஸ்டோன் மற்றும் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வங்கதேச வரலாற்றில் இந்த விபத்து மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.