தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
ENGvsIND: மான்செஸ்டரில் மீண்டெழுமா இந்தியா? CSK வீரர் அறிமுகம்; 3 மாற்றங்களுடன் கில் & கோ
இங்கிலாந்துக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோற்றதால் 2 - 1 எனப் பின்தங்கியிருக்கும் இந்திய அணி தொடரை 2 - 2 என சமன்படுத்த இன்று (ஜூலை 23) நான்காவது டெஸ்டில் களமிறங்கியிருக்கிறது.
ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இரண்டு பேரும் காயம் காரணமாகப் போட்டியில் இல்லாததால் 4-வது டெஸ்டில் அன்ஷுல் காம்போஜ் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது என்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் சுப்மன் கில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மான்செஸ்டரில் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
மீண்டும் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.
டாஸ் வென்ற பிறகு பேசிய ஸ்டோக்ஸ், "பந்துவீச்சுக்கு சற்று சாதகமான நிலைமை இருக்கிறது. கடந்த மூன்று போட்டிகளும் கடைசி செஷன் வரை சென்றிருக்கிறது. இது இரு அணிகளின் தரத்தைக் காண்பிக்கிறது.
வழக்கமான மான்செஸ்டர் பிட்சில் கொஞ்சம் புல் இருக்கிறது. லியாம் டாசன் தனது கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், "உண்மையில் நான் குழப்பமாக இருந்தேன். டாஸ் தோற்றது கூட நல்லதுதான்.
கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.
சில நெருக்கடியான மொமெண்ட்டுகளால் தோற்றிருக்கிறோம். ஆனால், அவர்களை பல செஷன்களில் வென்றிருக்கிறோம்.

மூன்று டெஸ்ட் போட்டிகளும் மிகத் தீவிரமாக இருந்தன. பிட்சின் மேற்பரப்பு கடினத் தன்மையுடன் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது.
அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
கருண் நாயருக்குப் பதில் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டிக்குப் பதில் ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப்புக்குப் பதில் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

பிளெயிங் லெவன்:
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்தியா: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், பும்ரா, சிராஜ்
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...