செய்திகள் :

கருப்பு டீசர்: 'என் பேரு சரவணன்; எனக்கு இன்னொரு பேரு இருக்கு' - RJB-யின் ஃபேன் பாய் சம்பவம்

post image

நடிகர் சூர்யா பிறந்தநாளான இன்று அவரது நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முக திறமை கொண்ட கலைஞர் ஆர்.ஜே பாலாஜி.

தானே நாயகனாக நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி கருப்பு படத்தின் மூலம் முதன்முறையாக மற்றொரு நாயகனின் படத்தை இயக்கியுள்ளார்.

சூர்யா
சூர்யா

இந்த படத்தில் ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவு மற்றும் விக்ரம் மோர் சண்டை பயிற்சி இயக்கத்தில் பணியாற்றியுள்ளனர். கலையரசன் படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார்.

2கே கிட்ஸ்களின் சென்ஷேஷனான சாய் அபயங்கர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், 'லப்பர் பந்து' சுவாஸ்விகா, 'நெடுஞ்சாலை' ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர்.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சூர்யாவை மட்டுமே முன்னிறுத்தி வெளியிடப்பட்ட டீசரில், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை போல அவர் வழக்கறிஞராக நடிப்பது வெளிப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆக்க்ஷன் கதையில். மேலும் சூர்யாவின் கஜினி பட ரெஃபரன்ஸும் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இது ஒரு ஃபேன் பாய் சம்பவம் என கொண்டாடி வருகிறார்கள்.

கருப்பு டீசர்:

suriya: "ஆருயிர் இளவல் சூர்யா அவர்களுக்கு...." - நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

இன்று ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆர்.ஜே.பி. இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'கருப்பு' படத்தின் டீசரை வெளியிட்டிருந்தது படக்குழு. ஒருபக்கம் வழக்கறிஞர், மறுப... மேலும் பார்க்க

"தமிழ் தெரியவில்லை என்றாலும், இங்குத் திறமைக்கு வாய்ப்பு தருகிறார்கள்" - ஷில்பா மஞ்சுநாத்

வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'. அனீஸ் அஷ்ரஃப் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.அரவிந்த் ஒ... மேலும் பார்க்க

9 Years Of Kabali: கோவா படத்தின்போது கிடைத்த ஐடியா; ரஞ்சித்தை அனுமதித்த ரஜினி!| Kabali Unknown Facts

'கபாலி' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ரஜினிக்கு 'கோச்சடையான்', 'லிங்கா' என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. அப்படத்திற்குப் பிறகு 2015-ம் ஆண்டு ரஜினிக்கு எந்தத் திரைப... மேலும் பார்க்க

D56: "தனுஷின் 56-வது படம், என்னுடைய மைல்கல் திரைப்படம்!" - விகடன் மேடையில் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பைசன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. த்ருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசைய... மேலும் பார்க்க