செய்திகள் :

"தமிழ் தெரியவில்லை என்றாலும், இங்குத் திறமைக்கு வாய்ப்பு தருகிறார்கள்" - ஷில்பா மஞ்சுநாத்

post image

வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'.

அனீஸ் அஷ்ரஃப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்திருக்கிறார். 

க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழ் திரையுலகம் குறித்துப் பேசியிருக்கிறார்.

"ஒவ்வொரு முறையும் நான் இங்கு வந்து மேடை ஏறி நிற்கும்போது எனக்குப் பயமாக இருக்கும். எனக்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கும், இந்த மண்ணிற்கும் நன்றி. முதன் முதலில் நான் இங்கு நடிக்க வரும்போது தமிழ் தெரியாது. சரியாக நடிப்பும் வராது.

ஆனால் அதை எதுவும் பெரிதுபடுத்தாமல் இங்கு மட்டும்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கிறது. தமிழ் இண்டஸ்ட்ரியில் திறமையை மதிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள். 

‘காளி’, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்கப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். நிறையப் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்

அந்த வகையில் இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Surrender: 'மன்சூர் அலிகான் சாரின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன், அவரிடம் இருந்து...'- தர்ஷன்

கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’. அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்க... மேலும் பார்க்க

தாமிரபரணி படுகொலை நினைவு தினம்: "மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம்" -இயக்குநர் மாரி செல்வராஜ்!

23.07.1999. நெல்லை மாவட்டத்தைத் தாண்டி, மாஞ்சோலை என்ற பெயர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறிமுகமான நாள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய த... மேலும் பார்க்க

suriya: "ஆருயிர் இளவல் சூர்யா அவர்களுக்கு...." - நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

இன்று ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆர்.ஜே.பி. இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'கருப்பு' படத்தின் டீசரை வெளியிட்டிருந்தது படக்குழு. ஒருபக்கம் வழக்கறிஞர், மறுப... மேலும் பார்க்க

கருப்பு டீசர்: 'என் பேரு சரவணன்; எனக்கு இன்னொரு பேரு இருக்கு' - RJB-யின் ஃபேன் பாய் சம்பவம்

நடிகர் சூர்யா பிறந்தநாளான இன்று அவரது நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முக திறமை க... மேலும் பார்க்க