செய்திகள் :

D56: "தனுஷின் 56-வது படம், என்னுடைய மைல்கல் திரைப்படம்!" - விகடன் மேடையில் மாரி செல்வராஜ்

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பைசன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

த்ருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் தனுஷின் 56-வது படத்தை இயக்கவிருக்கிறார்.

'பைசன்' திரைப்படம்
'பைசன்' திரைப்படம்

இப்படத்தை ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாரி செல்வராஜ் தனுஷின் 56-வது திரைப்படத்தை இயக்குவது குறித்து ஏற்கெனவே, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் பகிர்ந்திருந்தார்.

தற்போது, விருது விழாவின் முழுக் காணொளி ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் வெளியானப் பிறகு அந்தத் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அந்தக் காணொளியில் மாரி செல்வராஜ் பேசும்போது, "பைசன் படத்திற்குப் பிறகு நான் தனுஷ் சாரை வைத்து இயக்கவிருக்கிறேன்.

'கர்ணன்' திரைப்படம் நடந்த சமயத்திலேயே நாங்கள் புதியதாக மற்றுமொரு படத்தை இயக்க முடிவு செய்துவிட்டோம். சில காரணங்களால் அது தாமதமானது. அது பெரிய ப்ராஜெக்ட்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

எளிமையான கதையைப் பெரிய படமாகப் பண்ண வேண்டும் என ஆசைப்பட்ட படம் அது.

அது முக்கியமான திரைப்படமாக இருக்கும். அப்படத்தின் வேலைகளும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

அது என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்," எனப் பேசினார்.

முழுக் காணொளியைக் காண கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

9 Years Of Kabali: கோவா படத்தின்போது கிடைத்த ஐடியா; ரஞ்சித்தை அனுமதித்த ரஜினி!| Kabali Unknown Facts

'கபாலி' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ரஜினிக்கு 'கோச்சடையான்', 'லிங்கா' என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. அப்படத்திற்குப் பிறகு 2015-ம் ஆண்டு ரஜினிக்கு எந்தத் திரைப... மேலும் பார்க்க

"சிவாஜி இறந்தாலும் பொங்கல் சீர் இப்பவும் வந்துட்டிருக்கு!"- பெருமாள் முதலியார் பேரன் பேட்டி

திரையை அல்ல திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த படம் 'பராசக்தி'. கருணாநிதியின் கட்டுக்கடங்காத காட்டுத்'தீ' திரைக்கதை, வசனத்தில் சமூக அவலங்களை சுட்டெரித்த புரட்சித்'தீ'. திரையுலத்தின் வெற்றி திலகமான... மேலும் பார்க்க

Parthiban: "தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்!" - பார்த்திபன் பதிவு

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருவார். அவ்வப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களையெல்லாம் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் நமக்குச் சொல்வார். Parth... மேலும் பார்க்க