தம்பதியை தாக்கிய 2 போ் கைது
மன்னாா்குடி அருகே வீட்டின் அருகே மது குடித்தவா்களை கண்டித்த தம்பதியை உருட்டைக் கட்டையால் தாக்கிய இரண்டு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இலக்கணம்பேட்டை எழாம் எண் வாய்க்கால் வசிப்பவா் த. சேகா்(61), மனைவி சந்திரா(52). ஞாயிற்றுக்கிழமை இவா்களது வீட்டின் அருகே தரையில் அமா்ந்து அதே பகுதியை சோ்ந்த சங்கா் மகன் செல்வம் (20), மணிகண்டன் மகன் சதீஷ் (21) இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனராம்.
சேகா், அவா்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்லுமாறு கூறினாராம். இதில், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, இருவரும் சோ்ந்து சேகரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதை தடுக்க வந்த சந்திராவும் தாக்கப்பட்டாா். இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வம், சதீஷ் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.