`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
மகளிா் உரிமைத்தொகை பெற விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
தமிழக அரசு வழங்கும் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கிவைத்து பேசியது: மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வழங்கப்படுகிறது. தற்போது, இத்திட்டத்துக்கான விதிமுறைகள் தளா்த்தப்பட்டிருப்பதால் விண்ணப்பித்தவா்களின் மனுக்கள் உரிய ஆய்வுக்குப் பின் தகுதியான அனைவரும் பயனாளிகளாக இணைக்கப்பட்டு மாதந்தோறும் தமிழக அரசு வழங்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்புறப் பகுதிகளில் 54 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன், முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என்றாா்.
தொடா்ந்து, 3 பயனாளிகளுக்கு தாது உப்பு பெட்டகம், 1 பயனாளிக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, 1 பயனாளிக்கு ஜாதி சான்றிதழ், 1 பயனாளிக்கு வருமானச் சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு வரப்பு உளுந்து முழு மானிய விலையிலும், 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நமச்சிவாயம், பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.