விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!
பேருந்தில் கஞ்சா கடத்தியவா் கைது
திருவாரூா் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே கானூா் சோதனைச் சாவடியில் தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நாகையிலிருந்து கரூா் செல்லும் அரசுப் பேருந்தில் சந்தேகப்படும் வகையில் பையுடன் இருந்தவா் விசாரித்தனா்.
விசாரணையில் அவா் சிக்கல் அருகே ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகன் ஜெயசீலன் (21) என்பதும், பையில் ஒன்னரை கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ. 15,000 ஆகும். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.