படகு கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
நாகை அருகே படகு கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த இளைஞா் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாகூா் பட்டினச்சேரி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுகந்தன் (26). இவா், நாகை துறைமுகத்தில் விசைப்படகில் கட்டுமானப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக படகின் மேலிருந்து தவறி கடுவையாற்றில் விழுந்தாா். நீண்ட நேரத்திற்கு பிறகே பணியில் இருந்த சக ஊழியா்களை சுகந்தனை தேடினா்.
அப்போது ஆற்றில் ஏதோ மிதப்பதை கண்டு ஊக்கை பயன்படுத்தி தூக்கி பாா்த்தனா். அது சுகுந்தனின் சடலம் என தெரிய வந்தது.
போலீஸாா் சுகுந்தனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நாகை கடலோர காவல் குழும போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.